Monday, 23 October 2017

இனிமை தரும் இல்லறமா?
தனிமை தரும் துறவறமா? 
மனதை  யாரும்  அவ்வளவு  எளிதில்  புரிந்து கொள்ள  முடியாது.  நமக்கு எவ்வளவு அறிவுயிருந்தாலும்,  நாம் பல  முயற்சிகள்செய்து  வெற்றியைப் பெற்று இருந்தாலும் நமது மனதை அறிவதில்,அதன் சக்தியை உணர்வதில் நாம் தோற்றே விடுகிறோம்.காரணம் மனித மனம் ஆசையில் விழுந்து விடுகிறோம்.
மனதை குரங்கிற்கு ஒப்பிடுவார்கள்.காரணம் அது ஒரிடத்தில் நிலையில்லாது ஓடிக்கொண்டே இருக்கும். ஓடியகுரங்கு ஓரிடத்தில் களைப்படையும். அது உறங்கும் நேரமாகவும் இருக்கலாம்.அல்லது சலிப்படைந்து உடல் ஓய்வு பெறும் இடமாகவும் (விருக்ஷ்கம்-கல்லறை-சந்திரன்) இருக்கலாம்.அது போலத்தான் நம் மனமும்.ஞானிகள் மனதை ஓடவிட்டு களைப்படையச் செய்து தம் கட்டுக்குள் கொண்டு வருவார்கள்.
ஞானிகள் உடலையும் மனதையும் பிரித்து வைத்து பார்ப்பார்கள்.அதாவது உடலுக்கு தேவையான உணவையோ, உடல்  இன்பமோ  எதையும் தேடி அலைய மாட்டார்கள்.அதெல்லாம் அவர்களுக்கு கிடையாது.எப்போது உணவு கிடைக்கிறதோ அப்போது உண்பார்கள்.கிடைக்காத நேரங்களில் அதைத் பற்றி கவலைபடாது இருபார்கள்.அதைத் தேடி அளைய மாட்டார்கள்.
அதைப்போலவே நாம்  என்ன பேசினாலும் வாழ்த்தினாலும்,தூற்றினாலும் அவர்களின் மனம் அதில் ஈடுபாடு காட்டாது.பட்டினத்தடிகளின் பக்குவப்பட்ட பாட்டினைப் படித்தாலே நமக்கு உண்மை புரியும்.
வாசற் படி கடந்து வராத் பிச்சைக்கிங்
காசைப் படுவதிலலை-அசைதனைப்
பட்டிருந்த கால்மெல்லாம் போதும்; பரமேட்டி
சுட்டிறந்த ஞாந்த்தைச்ச் சொல்.
 அடுத்து உடலுக்கு எவ்வளவு வசதிகள் தேவைபடுகிறது என்பதை உடலின் சவுகரியங்களை அவரே பட்டியலிட்டு சொல்கிறார்.
காடோ செடியோ கடற்புறமோ கனமே மிகுந்த நாடோ
நகரோ,நகர்நடுவோ,நலமே மிகுந்த வீடோ
புறந்திண்ணையோ,தமியேனின் உடல் வீழுமிடம்
நீடோய் கழுங்குன்றீன் ஈசா ! உயிர் துணை  நின்பதமே.
ஆக உடலை சவுகரியமாக சித்த ஞானிகள் வைக்க மாட்டார்கள் என்பதை உணரமுடிகிறது   . உடலையும்  மனதையும் பிரித்துப் பார்த்து குறிக்கோளை (மனதை அடக்கி ஆள) அடைய முடிகிறது.நமது மனதை நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா? என்ற கேள்வி எழுவது இயற்கையே.
நமது வாழ்கையில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களுக்கு காரணம் நமது மனமே காரணமாகிறது.மனதினை கடலிற்கு உவமையாக சொல்லுவார்கள். அதுபோலத்தான் ராசிச் சக்கரத்தில் கடகத்தை சொல்லலாம்.கடகம் ராசியானது நீர்நிலை நிறைந்த ராசியாகும். நண்டினை உருவமாக குறிப்பார்கள். நீர்நிலைகளைப் பார்த்தால் மேலே அலைகள் ஓயாது ஓடிக்கொண்டே இருக்கும். அதனின் அடிஆழப் பகுதி அமைதியாக இருக்கும்.அதைப் போலவே நமது மனதின் மேல்புறமோ ஓயாமல் ஏதாவது சதா நினைத்துக் கொண்டேயிருக்கும். நண்டின் வலைக்குழி குறிப்பிடுவது போல மனம் வெளியே ஓடிக்கொண்டு இருந்தாலும் மனதின் ஓர் ஓரத்தில், ஆழத்தில் யாருக்கும் தெரியாத ஒரு வடு, ஒரு சிந்தனை, ஒரு காயம்,  ஒரு ஏக்கம், ஒரு துன்பம் இருக்கவே செய்யும். ஆசை நெஞ்சத்தின் அடியில் அகலாத ஏக்கம் இருந்தே தீரும்.
காலபுருக்ஷ்னுக்கு நான்காமிடம் கடகம்.  அது மனதுக்கு காரகனின் சந்திரனின் வீடு ஆகும்.  ஆசை,கோபம்,வஞ்சனை,பொறாமை, போன்ற மனம் உணர்வுகளை தெளிவு படுத்துவதே சந்திரனின் காரகங்கள்..உடலில் மார்பு , சுவாச உறுப்பையும் குறிக்கும். மனதின் தெளிவு ,  பயித்தியம் போன்ற மனவியாதிகளைக் குறிக்கும்.
காலபுருக்ஷ்னுக்கு முதலாமிடம் மேசம்.அது மனிதனின் உடலையும் தலையையும் குறிக்கும். தலைக்குள் இருக்கும் மூளையைக் குறிக்கும்.ஆக ஜாதகத்தில் மூளையைக் குறிப்பிடும் கிரகம் செவ்வாய் ஆகும்.
செவ்வாயின் மற்றொரு வீடான விருக்ஷ்கம் காலபுருக்ஷனுக்கு எட்டாவது ராசியாகும்.மனிதனின் உடலில் ஆண் பெண் மூலாதாரத்தைக் குறிக்கும்.அதாவது ஆண்களுக்கு பிறப்பு உறுப்பையும்,பெண்களுக்கு கர்ப்பப் பையையும் குறிப்பிடும்.
சிம்மம் காலப்புருக்ஷனுக்கு அய்ந்தாவது வீடாகும்.வயிறு,இருதயம் போன்ற பகுதிகளைக் குறிக்கும்.ஆன்மாவையும் குறிக்கும்.
செவ்வாய் மூளையைக் குறிக்கிறது. அதாவது மூளையாக செவ்வாய் செயல்படுகிறது.செவ்வாய் நெருப்பு வீட்டுக்குடையவன்.சந்திரன் நீர் ராசிக்குடையவன். உணர்வுகள் சிறப்பாக செயல்படும் இடங்களில் அறிவு வேலை செய்யாது. உணர்சி வசப்பட்ட நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் புத்திசாலித்தனமானதாக இருக்காது. அதாவது புத்தி தடுமாற்றம் அடைந்து தன் செயலை இழக்கிறது.எனவேதான் கடகத்தில் (நீர்நிலையில்) செவ்வாய் (நெருப்பு)நீசமாகிறது.இங்கு மனதின் சக்திமட்டுமே ஓங்கியிருக்கும்.
அதுப்போல அறிவு ஓங்கியிருக்கும் போது புத்திசாலித்தனம் வெளிப்படும்.புத்திசாலித்தனம் நெருப்பு சக்தி.வெற்றியைத் தேடி வெறியோடு புத்தி அலையும்.இந்த புத்திக்கு வெற்றியை மட்டுமே தேடி அலையத்தெரியும்.எவ்வளவு வருத்தங்கள் வந்தாலும் வெற்றியை மட்டுமே விலையாக கேட்கும்.அதற்கு என்ன விலையையும் புத்தி கொடுக்க தயாராகயிருக்கும்.எவ்வளவு உடல் வருத்தங்கள் வந்தாலும் பட்டினத்தார் சொல்வதைப்போல பொருட்படுத்தமாட்டார்கள்.அறிவின் வேகம் தீயின் வேகம் இப்பொது உங்களுக்கு புரியும்.
மேசம் காடு.  ஆடுகள் மேயும் பகுதி. நெருப்பு சக்தியைக் கொண்டுள்ள செவ்வாய் (மூளை) நீரில் (கடகத்தில்) நீசமாகி தன்செயலை இழந்து விடுகிறார் . ஆக மூளை (அறிவிற்)க்கும்  உணர்விற்கும் போட்டி இருந்து கொண்டே உள்ளது.  செவ்வாயும்,சந்திரனும் ஒருவர் ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ளும்போது மனிதனின்  உடலுக்கும், மனதிற்கும் போட்டி ஏற்படுகிறது.
மனம் (சந்திரன்) புத்தியை (செவ்வாயை)உடலை தனக்கு அடிமையாக்கிக் கொண்டு இன்பங்களை பலவாறாக ,பற்பல பிறவிகளில் பெற்று விடுகிறது.மனக் குரங்கு பல இன்பங்களைப் பெறுவதற்கு புத்தியை தன் கட்டுக்குள் வைத்துள்ளது.பல ஜன்மங்களில் இன்பங்களைப் பெற்று வந்த மனம் முடிவில் சலிப்படைந்து , மூச்சை இழந்து, பேச்சற்று (விருக்ஷகத்தில்) ஓய்வு பெறுகிறது.    உணர்வு ( சந்திரன் நீசம் பெற்ற ) ஒடுங்கிய  நிலையில் மூளையின் (செவ்வாயின் புத்தியின்) வேகம் ஓங்குகிறது.
இதுவரை மனமும் புத்தியும் மனிதனின் உடலையும்,உலக வாழ்க்கையை எவ்வாறு வைத்துள்ளது எனக் கண்டோம்.நமது புராணங்களில் குறிப்பிடுவதுபோல நமது ஆன்மா பலபிரவிகளில் பற்பல கர்மாக்களை பெற்றுள்ளது.ஒவ்வொரு பிரவியிலும் ஒவ்வொரு தாயின் வயிற்றில் பிறந்து,ஒருத்தியை மணந்து,பிள்ளைகளைப் பெற்று ஒவ்வொரு வகையான இன்பங்களைப் பெற்றுள்ளோம். இதை நமது சித்தர் பெருமகனார் எவ்விதம்  கூறுகிறார்  எனப் பார்ப்போம்.
அன்னை யெத்தனை எத்தனை அன்னையோ
          அப்பன் யெத்தனை எத்தனை அப்பனோ
பின்னை யெத்தனை எத்தனை பெண்டிரோ
          பிள்ளை யெத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை யெத்தனை எத்தனை ஜன்மமோ
          மூடன் ஆயடி ஏனும் அறிந்திலேன்
இன்னும் யெத்தனை எத்தனைஜன்மமோ
          என் செய்வேன் கச்சி ஏகம்பனே?
இப்படி பல பிறவிகளை கடந்த மனம் முடிவில் சலிப்படைந்து மூர்ச்சையிழந்து பேச்சற்று (மனமான சந்திரன்)  ஓய்வு பெறுகிறது. மனதின் உணர்வு ஒடுங்கிய நிலையில் (மனமான சந்திரன் விருச்சகத்தில் நீசம்)  புத்தியின் வேகம் மூளையின்  ஆற்றல் ஓங்குகிறது.
செவ்வாயும் சந்திரனும் ஜாதகத்தில் தொடர்பு கொள்ளும்போது வாழ்ககை போராட்டமாகவே அமைகிறது. மனமும் புத்தியும் ஒருவரின் ஆன்மாவை எவ்வாறு பாதிக்கிறது என்று யோசிப்போம்.சூரியனின் ஆட்சி வீடு சிம்மம். இது வனத்தைக் குறிக்கும்.மனிதனின் உடலில் இருதயத்தைக் குறிக்குமிடமாகும். சூரியன் நெருப்புக் கிரமாகும்.மேச ராசியோ நெருப்பு ராசியாகும். சூரியனோடு செவ்வாய் சேர்ந்தாலோ,அல்லது சூரியன் வீட்டில் செவ்வாய் நின்றாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்தாலோ அங்கு ஒளியின் பிரவாகம் ஏற்படும்.அறிவும் ஆன்மாவும் ஒன்று கூடும்போது ஜாதகர் மிகுந்த சுறுசுறுப்பாகவும் .படபடப்புடனனும் செயல்படுபவராக  காணப்படுவார் .
சூரியன்  (ஆன்மா) மேசத்தில் (தலையில்) உச்சம்  பெறுவதால் ஞான ஒளி தோன்றும்.எடுத்த காரியம் யாவிலும் வெற்றியே கிட்டும்.இவ்வகையான ஜாதகர்களுக்கு வாழ்வின் வசதிகள் வாயிலில் காத்து நிற்க்கும்.ஆன்மா பலம்  அமையும்.
சூரியனுடைய வீட்டில் சிம்மத்தில் நின்றால் இருதயத்தில் குருதியின் ஓட்டம் நிற்காமல் ஓடினால் இருதயத்திற்கு பழுது ஏற்படும்.பெரிய நெருப்பில் சிறு நெருப்பிற்கு மதிப்பில்லை.அதைப் போலவே ஆன்மா வளர்ச்சி அடையும்போது அறிவு வெளியே தெரிவதில்லை.ஆத்மஞானிகள் தங்களை புத்திசாலிகள் என்று என்றைக்கும் வெளிக்காட்டியது கிடையாது. சுகமான வாழ்க்கைக்கு இந்த தொடர்பு ஜாதகரை அனுமதிப்பதில்லை.


மனிதனின்
மூளை



சூரியன்   :ஆன்மா
சந்திரன்   :மனம்
செவ்வாய் :மனித உடல்


மனமிருக்கும் நெஞ்சுக்குழி

இருதயம் காதல் உணர்வு

ஆண்,பெண் ஜெனனஉறுப்பு கல்லறை


சூரியன் சந்திரன் சேர்க்கை






மனம் அறிவிற்க்குள் அடங்கினால் ஆன்மா பலப்படுகிறது.காரணம் சூரியன் உச்சத்தை நோக்கிச் செல்கிறது.







சந்திரன் சூரியன்


சூரியன்,சந்திரன்,செவ்வாய் ஆகிய மூவரும் மேசம்,கடகம்,சிம்மம்,விருக்ஷகம் ஆகிய
1. வீடுகளில் நின்றாலும்
2. (ஜாதகத்தில் எங்கு நின்று)  வீடுகளைப் பார்த்தாலும்
3 .மூவரும் கூடி நின்றாலும்
4. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தாலும்
காதலில் ஈடுபட்டு வெற்றியும் பெற்று விடுகிறார்கள். காதலே வேண்டாமென்று கூறி குடும்ப வாழ்வை ஒதுக்கி விடுகிறார்கள்.
ஆய்வு ஜாதகம் 1 :
சுக்கிரன்
சூரி,புதன்




சூரி,


கேது
ஸ்ரீராமர்       ஜாதகம்
லக் குரு,சந்


லக் சந்திரன்
செவ்
ராகு
செவ்



சனி






மேலே கண்ட ஜாதகம் அவதார புருஷர் ஸ்ரீராமர் அவர்களுடையது.
1.செவ்வாய் மகரத்தில்.சூரியன் மேசத்தில்,சந்திரன் கடகத்தில் உள்ளனர்.
2.செவ்வாய் மேசத்தையும்,கடகத்தையும்,சிம்மத்தையும் பார்க்கிறது.
இங்கு விருஷகத்தை மட்டும் எவரும் பார்க்கவில்லை. மேசத்தில் சூரியன் உச்ச பலன். எனவே ஆன்மாவின் பலம் அதிகம்.செவ்வாயின் பார்வை படுகிறது. மனம் உடலைப் பார்க்கிறது. உடலினை மனமும் பார்க்கிறது. உடலிற்கு சுகம் கிடைக்க வேண்டும். ஆனால் இவ்விருவர்களுக்கும் இடையில் சூரியன் (ஆன்மா) உள்ளது.உடலினால் ஏற்படும் சுகம் இவருக்கு கிடைக்கவில்லை.
காலபுருஷனுக்கு சிரசான (மூளை)செவ்வாய் கர்மத்திலே உச்சம் பெற்று இருப்பதால்   (  தாய் - சந்திரனின் பார்வையால் ) கைகேயின் எண்ணத்தால்,  (தகப்பன்- சூரியனின் ) தசரதனின் கர்மாவை கழிக்க சொந்த நாட்டினை விட்டு வனத்திலும் (தனுசுவைக் ) கடந்து, கடலைத் தாண்டி (மகரத்தினை )  ஜாதகர் (உடல்-செவ்வாய்) அலைய வேண்டி வந்தது.
         சூரியனும், சந்திரனும்,செவ்வாயும் தொடர்பால் வாழ்க்கை முழுவதும் போரட்டமாகவே இருந்தது. உடலுக்கும் மனதிற்கும் இடையில் ஆன்மா வரும்போது (செவ்வாய்- சூரியன், சந்திரன்இல்லற வாழ்வில் இனிமை என்பது குறைவுதான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
ஆய்வு ஜாதகம் 2 :

சூரி,செவ் சுக்கிரன் சனி குரு
புதன்
ராகு


சூரி, செவ்




புத்தர்
ஜாதகம்
லக்,



லக்,




கேது

சந்



சந்


மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.உடல்காரகன் செவ்வாய் பலமாய் இருக்கிறார். ஆன்மாவின் கிரகமான சூரியனோடு புத்திக்கிரகம் செவ்வாய் உடனிருக்கிறார்.செவ்வாய் மனதின் வீட்டையும்,மனதிற்கு காரகனாகிய சந்திரனையும் பார்க்கிறது. கல்லறை வீடான விருக்ஷகத்தையும் செவ்வாய் பார்க்கிறது.
ஆசைகளை அனுபவித்த மனம் (சந்திரனோ நீசத்தை நோக்கிச் செல்கிறது)  விருக்ஷகத்தை நோக்கி இளைப்பாறப் போகிறது. மனக்குறங்கு  அடங்கி இருக்கும் நிலை . மனிதர்களின் மரணத்தைக் கண்டதும் , புத்தி புதிய தேடலைத் தேடுகிறது.  அதாவது கல்லறை வீடான விருக்ஷகத்தை மூளைக்கதிபதி செவ்வாய் பார்த்ததும் மனம் பக்குவம் அடைகிறது.  எனவே ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொல்லவும் வைத்தது. ஆன்மாவும் புத்தியும் ஒன்றாக கூடியிருக்கும் உன்னத நிலையைத் தந்தது. ஆத்மாவும் மனமும் பார்வையை பரிமாரிக்கொள்கின்றனர். பலமானவன் பல வீனனை வெல்வதைப் போல இங்கு பலமான ஆன்மா பலவீனமான மனதின் செயலை அடக்கி விட்டது.
பெரிய நெருப்பு சூரியனும் சிறிய நெருப்பு செவ்வாயும் அருகருகே. அவர்களுக்கு எதிர் திசையில் வறண்ட,விரத்தியான ,நிலையற்ற மனம். எனவே சூரியன் தசையில் செவ்வாய் புத்தியில்  சாமாதி நிலை எய்தினார்
மனதிற்க்கும் உடலுக்கும் இடையில் ஆன்மா  ( சந்திரன், சூரியன் ,செவ்வாய் ) வரும்போது லவுகீக வாழ்க்கை வாழ முடியாமல் போகிறது.குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் குடும்ப வாழ்வினை விட்டு வெளியேறி விடுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம்  இச் சாதகமாகும். இவருக்கு ராஜயோக வாழ்க்கை கிடைத்தும் , உடலை ஆனந்தம் தேடிவந்தும் ஆன்மா உடலினையும் மனதினையும் பிரித்ததால் உலக வாழ்க்கை பயணத்தில் உடலின்பம் மெய்யாகவே கிடைப்பதில்லை என்பதை நாம் உணரலாம்.

ஆய்வு ஜாதகம் 3 :



குரு





சனி

வாரியார்
ஜாதகம்
லக், ராகு
புதன் செவ்



லக், செவ்
கேது
சூரி,

சூரி,


சந்
சுக்கிரன்


சந்


இவர் ஜாதகத்தில் மேசத்தை சந்திரன் பார்க்கிறது. மனம் என்னும் சந்திரன் நீசத்தை நோக்கிச் செல்கிறது.மனம் ஒடுங்குகிறது.
கடகத்தில் செவ்வாய் நீசம் அடைகிறார். சூரியன் சிம்மத்தில் ஆட்சி. சந்திரன் துலாத்தில் உள்ளது. சந்திரனை செவ்வாய் பார்க்கிறது .
 மனதினை மூளை முழுமையாக ஆள்கிறது. மனமும் மூளையும் விவேகமான முறையில் இணைந்துள்ளது.  ஆன்மாசூரியன் வாக்கினில் அமர்ந்த்தால்   இவரை சதாகாலமும் இறைவனின் நாமத்தைபேச வைத்தது. முருக கடவுளை பூஜிக்க வைத்தது. இவர் தன்வாழ்நாளை முருகனை வழிபடுவதிலே செலவிட்ட அருட்தொண்டர்.பந்தபாசங்களை துறந்த தெள்ளிய ஞானி.
மூளைக்கும் மனதிற்கும் இடையில் ஆன்மா வந்துள்ளது. 
செவ்வாய்     சூரியன்    சந்திரன் .
 அறிவு    -   ஆன்மா     -   மனம்    எனவே இல்லறத்தை துறந்த ஞானி. மனம் தனிமை பட்டுள்ளது. மூளை ஆன்மாவை தொடுகிறது.பிடிவாதமான பக்தியில் ஈடுபட வைத்தது.   தனிமை தரும் துறவறமே இவருக்கு கிடைத்தது.
    ஆய்வு ஜாதகம் 4 :
சுக்கிரன் ராகு

சூரி, குரு புதன்




சூரி,

செவ்
பெரியவர் சங்கராச் சாரியர்
   ஜாதகம்

செவ்

   ஜாதகம்


லக்,


லக்,


சந்
 
சனி  கேது

சந்
 


இவர் ஜாதகத்தில் செவ்வாய் ஆன்மா சூரியனையும் சிம்ம லக்னத்தையும் பார்க்கிறது.  விருக்ஷக சந்திரன் சூரியனைப் பார்க்கிறது அதாவது அமைதியடைந்து, அடங்கிய மனமும்  மூளைக்கதிபதி செவ்வாயும் ஆன்மாவை பார்க்கிறது.
 மனதுக்கு இங்கு ஆசையில்லை.எந்தச் சலனமும் இல்லை. ஒவ்வொரு பிறப்பிலும் தான் அனுபவித்த இன்பங்களை இழந்து அமைதியைத் தேடி மனம் இளைப்பாறுகிறது.
மூளை தன்னிடமுள்ள விவேகத்தை குறைத்து பக்குவப் பட்ட நிலையில் ஆன்மா உயர இடமளிக்கிறது அதாவது செவ்வாய் தன் உச்ச வீட்டை கடந்து ஆட்சி வீட்டுக்கு செல்வதே காரணமாகும். இவர் ஜாதகத்தில் மனம் சந்திரன் நீசம்.செவ்வாய் தன் வீட்டிலே சும்மா இருக்கிறது. ஆன்மா உச்சத்தை கடந்து செல்வதால் அது தன் ஆணவத்தை இழந்து பரிபக்குவமாகிறது.அசைவற்ற மனதினில் சிப்பியும் பிறக்கிறது.முத்தும் பிறக்கிறது. நூறாண்டுகள் கடந்து வாழ்ந்து மக்களை நல்வழிப் படுத்திய மனித உருவில் வாழ்ந்த தெய்வம்.  
குரு திசை செவ்வாய் புத்தியில் முக்தியடைந்தார்.
மேலே விளக்கிய நான்கு ஜாதகர்களும் ஆன்மாவைத்தேடி வெற்றி பெற்றவர்கள் .தனக்கென வாழாதவர்கள்.உலக மனிதர் வாழ்க்கையை உய்விக்கவே உதித்தவர்கள் .செவ்வாயுக்கும் சந்திரனுக்கும் இடையில் சூரியன் வரும்போது ஜாதகர்களை தனிமயாக்கி விடுகிறது. தனிமை தரும் துறவறத்தை பெறுகிறார்கள்.
இது மட்டுமா ? இல்லற வாழ்வை இழக்க வைக்கிறது.
ஆய்வு ஜாதகம் 5 :


குரு
கேது







இந்திராகாந்தி
லக், சனி



லக், சனி

சந்
செவ்

சந்
செவ்
சுக்கிரன் ராகு
சூரி புதன்,
 
 

சூரி
 
 

இவரின் ஜாதகத்தைப் பார்த்தால்  மூன்று கிரகங்களும் பரிவர்த்தனை ஆனதால் இல்லறத்தைக் கொடுத்து,பின்பு இன்பமான இல்லறத்தை இழக்கவும் வைத்தது. நாம் வெளியிடங்களில் சென்றாலும் ,வெளிஊர்களுக்கு சென்றாலும் நாம் வீடு திரும்புவதில் மிக கவனம் எடுப்போம்.காரணம் இயல்பான குணபாவனைகளோடு சொந்த வீட்டில் இருக்கவே ஆசைப்படுவோம்.அதைப் போலத்தான் கிரகங்களும் பரிவர்த்தனைப் பெறுவதற்கு முன் ஒரு நிலையும்,பரிவர்த்தனைப் பெற்ற பின்பும் ஒரு நிலையும் எடுக்கிறது.
அதாவது குழந்தை பள்ளியில் இருக்கும்போது பள்ளி விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும்.அதே குழந்தை வீட்டுக்கு வந்ததும் தன் தாயிடம் மிகசெல்லமாக நடந்து கொள்ளும்.பிடிவாதமாக அனைத்தையும் கேட்க்கும்.




உடல் ஆன்மாவைத் தொடுகிறது ஆன்மா மனதினை தொடுகிறது மனமோ தன்வயத்தில் இல்லை. தம் இளமையிலே கணவரை இழக்க வைத்தது வெறுக்கிறது.  குரு தசையில் கணவரை இழந்தார்.சனி தசையில் சூரிய புத்தியில் தன் மகனை விபத்தில் பரிகொடுத்தார். சனி தசையின் முடிவில் தான் துர்மரணமடைந்தார்.


பரிவர்வத்தனைக்குப் முன்
லக்,  சனி
சந்
செவ்

சூரி,
 
 











சந்திரன் ஆட்சி. எனவே மனம் உற்சாகம் பெறுகிறது. சூரியன் ஆட்சி. ஆன்மா உயர்வான கர்வம். செவ்வாய் ஆட்சி. மனம் ஆன்மாவைத் தொடர்ந்து உடலினைத் தொடுகிறது. எனவே தான் பிடிவாதமான நிலையில் காதல் ஜெயித்தது.காதல் திருமணமும் நடைபெற்றது


பரிவர்வத்தனைக்குப் பின்
லக்,
சந்
சனி

சூரி

செவ்
 
 









தனிமையைத் தரும் துறவறம் செவ்வாய்     சூரியன்    சந்திரன் தருகிறது
.இவைகள் எதனால் நடக்கிறது ?  காரணம்தான் என்ன?

இதிலிருந்து நாம் தப்பிக்க முடியுமா?
 வழிதான் என்ன?
 தட்டினால் திறக்குமா?
 கேட்டால் கிடக்கிமா?
ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவைகள் நடந்துதான் தீருமா?

இவைகளுக்கு பதிலைத் தேடும் நம்பயணம் தொடர்கிறது.

1 comment:

Geetha said...

...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம்.

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம். மிதுன லக்னம் லக்னத்தில் குரு .11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் . சூரியன் ,புதன்,   சனி பகவ...