Sunday, 9 June 2019

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம்.


சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம்.


மிதுன லக்னம் லக்னத்தில் குரு .11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் .
சூரியன் ,புதன்,   சனி பகவான் பாக்கியாதிபதி ஆகி லாபஸ்தானத்தில் நீசம் அடைகிறார் .


அவரோடு பிதுர்காரகன் சூரியன் சேர்ந்திருக்கிறார் .
பிதுர்ஸ்தானாதிபதி சனி பகவான் பதினொன்றில் நீசமாகி இருக்கிறார்

அந்த ஒன்பதாமிடத்தை குரு பகவான் பார்க்கிறார். 


 மிதுன லக்கினத்தை பொறுத்தவரையில் இலக்கணத்தின் அதாவது லக்னாதிபதியின் கர்ம காரகன் குரு பகவான்.


ஜாதகரின் கர்ம தொழிலை குறிப்பிடுவது

இங்கு குருபகவான ஐந்தாம் பார்வையாக துலாத்தையும்

 9-ஆம் பார்வையாக கும்பத்தையும்


 இரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார் கர்ம காரகன் குரு பகவான்

இப்போது தந்தை ஸ்தானத்தையும்,9மிடத்தையும்


பிதுர்காரகன் சூரிய பகவானையும் ஒருங்கே அனைத்தையும் குரு பகவான் பார்க்கிறார்

பிதுர் காரகனு(சூரியனு)ம், பிதுர்  ஸ்தானாதிபதி (சனி) யும் கூடி மேஷத்தில் நீசம் அடைகிறார்



ஆக சூரிய நாடியின் அடிப்படையில் கவனிக்கும் பொழுது பிதாவின் மரணத்திற்கு காரணமானவர் கர்மக்காரகன் குரு .

ஈஸ்வர நாடியில் ஜாதகனின் பதினைந்தாவது வயதில் ஜாதகனின் தகப்பனார் மரணம் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது
 

இது எப்படி நடக்கும்


இது எப்படி நடக்கும் என்று ஆராய்ந்தோமேயானால் குரு பகவான் ஒரு சுற்று லக்கினத்தினை சுற்றிவர 12 வருடம் ஆகும் .


மிதுனத்தில் உள்ள குரு ஒரு சுற்று சுற்றி முடிக்கும்போது ரிஷபத்துக்கு வரும்போது வயது ஜாதகருக்கு 12ம் 

.
மிதுனத்தில் 13 வது வருடம்,

கடகத்தில் 14 வது வருடம் 
சிம்மத்தில் வரும் பொழுது 15 வயதை தொடுகிறது

 இரண்டாம் சுற்று ஆரம்பிக்கும் பொழுது சூரியனின் வீட்டை தொட்டு (பிதுர்ஸ்தானத்தையும்) அது கும்பத்தையும் ஸ்தானாதிபதியும் சனி பகவானையும் காரகன் சூரியனையும் சிம்மத்தில் இருந்து பார்க்கும் பொழுது தகப்பனுக்கு மரணம் என்று சொல்லுகிறது


இதற்கான ஸ்தானாதிபதியும் பார்க்கும் பொழுது இந்த நிகழ்வு நடக்கிறது இந்த அமைப்பு ஈஸ்வர நாடி ஜோதிடத்தில் சூரிய நாடி 53வது சக்கரத்தில் மிக அழகாக விளக்கி உள்ளது.

நண்பர்களே இதை நீங்களும் ஆய்வு செய்து பாருங்கள்

எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் கர்மகாரகன் காரகப் வீட்டையும் ,அதன் அதிபதியையும் பாவத்தையும் பாதகாதிபதியும் ஒருங்கே பார்க்கும் பொழுது தன் வேலையை செய்து விடுகிறார் என்பதை குரு பகவான் இந்த சக்கரத்தின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஈஸ்வர நாடி ஆய்வுகள் தொடரும்.

நாளை சந்திப்போம்

ஆய்வு:

கோட்டைப்பட்டி ஜோதிவேல்

9150080580

எல்லாம் இறைவன் செயல்.

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம்.

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம். மிதுன லக்னம் லக்னத்தில் குரு .11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் . சூரியன் ,புதன்,   சனி பகவ...